ஸ்ரீமகாவிஷ்ணு மகாத்மியம்
7 views | +0 today
Follow
ஸ்ரீமகாவிஷ்ணு மகாத்மியம்
ஸ்ரீமகாவிஷ்ணு மகாத்மியம் - உமா பாலகுமார்; பக்.396; ரூ.175; அருண் பதிப்பகம், எண். 107/8, கௌடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 600 014. 33 தலைப்புகளில் மகாவிஷ்ணு குறித்த கதைகளின் தொகுப்பு. மகாவிஷ்ணு, லட்சுமி, பூ தேவி, நீளாதேவி கதைகளுடன் துவங்குகிறது. மகாவிஷ்ணுவிடம் இருந்து பிரம்ம தேவர் தோன்றியது, கலைமகள் கதை என விரிந்து, அனந்த பத்மநாப சுவாமி, திருப்பதி மலையப்ப சுவாமி, உப்பிலியப்பன், அரங்கநாதர், சுந்தராஜப் பெருமாள் என பெருமாள்களின் கதைகளுடன் செல்கிறது. ஆதிசேஷன், கருடாழ்வான், அனுமன் ஆகியோரின் கதைகளுடன், மகாவிஷ்ணுவின் தசாவதாரக் கதைகள், 108 திவ்யதேசம், ஆழ்வார் ஆசாரியர்களின் கதைகளுடன், பகவத்கீதை, சாளக்கிராமம், துளசி, சங்கு, சக்கரம் என மகாவிஷ்ணு தொடர்புடைய அனைத்தையும் சிறப்பாகத் தொகுத்துள்ளார். விஷ்ணுபுராணத்தின்படி மகாவிஷ்ணுவிடம் இருந்து உலகமும் படைப்பும் இயக்கமும் தோன்றிய கதைகள் எளிய நடையில் தரப்பட்டுள்ளது சிறப்பு. 108 திவ்யத் தலங்களின் வழிகாட்டிக் குறிப்புகளும் தலத்தின் சிறப்பும் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது, படிப்போரை நிச்சயம் கவர்ந்திழுக்கும்.
Curated by Arun Kumar
No scoops have been published yet. Suggest content to its curator!