ஒதுங்க நினைத்த த்ரிஷா!, Actress Trisha...
ஒதுங்க நினைத்த த்ரிஷா!
Posted Date : 15:51 (03/12/2012)Last updated : 16:03 (03/12/2012)
மாடலிங் துறையிலிருந்து சினிமா துறைக்கு வந்தவர் நடிகை த்ரிஷா.
மிஸ் சென்னையாக பட்டம் பெற்ற பின்னர், சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார் த்ரிஷா.
அவர் தனது விருப்பத்தை கூறியபோது,அவரது தாயார் உமா, முதலில் சினிமா வேண்டாம் என்றே கூறினாராம்.ஆனால்,"3 படங்களில் மட்டுமே நடிக்கிறேன்.பின்னர் சரியாக வரவில்லையென்றால் ஒதுங்கிவிடலாம்” என கூறி திரையுலகில் நுழைந்தராம் த்ரிஷா.
அதன்படியே லேசா லேசா, மௌனம் பேசியதே ஆகிய படங்களில் அவர் நடித்த நிலையில்,அப்படங்கள் சொல்லிக்கொள்ளும்படியான வரவேற்பை பெறவில்லை.இதனால் சினிமாவை விட்டு ஒதுங்கலாம் என த்ரிஷா நினைத்தபோது, ஹரி இயக்கத்தில் 'சாமி’ படம் மூலம் அடித்தது அதிர்ஷ்டம்!
அப்படத்தில் தொடங்கிய அவரது ஆட்டம்,இன்னமும் ஓயாமல் இருக்கிறது. - Source: Ananda Vikatan website - URL: http://news.vikatan.com/index.php?nid=11487#cmt241



Your new post is loading...

